உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.ஜி.பி., கல்வி நிறுவனம் பேராசிரியருக்கு பயிற்சி

பி.ஜி.பி., கல்வி நிறுவனம் பேராசிரியருக்கு பயிற்சி

நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.கல்வி நிறுவன தாளாளர் கணபதி தலைமை வகித்தார். முதல்வர் முகமது ஷெரீப் வரவேற்றார். கல்வி நிறுவன துணைத்தலைவர் விசாலாட்சி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பெரியார் பல்கலை துறைத்தலைவர் நிர்மலா, சென்னை சைதாப்பேட்டை கல்வியல் மேம்பாட்டு நிறுவன கல்வியியல் துறை தலைவர் நிர்மலாதேவி, தஞ்சை ஸ்கில்ஜோன் தலைமை பயிற்சியாளர் லதா, ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.பயிற்சி பட்டறையில், ஆறு கல்லூரிகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கல்வி நிறுவன முதல்வர்கள் விவேகானந்தன், ரவிக்குமார், கலியபெருமாள், மங்கையர்கரசி, அருணாசலம், துணை முதல்வர் முகமது நூருன்னிசா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ