உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் நகராட்சி சேர்மன் பதவி தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு

ராசிபுரம் நகராட்சி சேர்மன் பதவி தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு

ராசிபுரம்: தே.மு.தி.க., சார்பில், ராசிபுரம் நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு அக்கட்சியினர் பலரும் போட்டி போட்டி விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதற்காக, மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் கண்ணகி, மாநில மாணவரணி இணைச்செயலாளர் மகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சம்பத்குமார், எம்.எல்.ஏ., சாந்தி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, ராசிபுரம் நகராட்சி சேர்மன் பதவிக்கு, அக்கட்சியின் நகரச் செயலாளர் இளையராஜா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவரை தொடர்ந்து, 1வது வார்டுக்கு செல்வி, 2வது வார்டுக்கு இக்பால், 3வது வார்டுக்கு அப்பி, 5வது வார்டுக்கு மாரிமுத்து, 9வது வார்டுக்கு அலாவுதீன், நகர அவைத் தலைவர் செங்குட்டுவன், 10வது வார்டுக்கு சக்திவேல், வேலாயுதம், 11வது வார்டுக்கு கோமளம், 12வது வார்டுக்கு சரவணன், 13வது வார்டுக்கு பிரியா, 20வது வார்டுக்கு செல்வராஜ், 21வது வார்டுக்கு செல்வமணி, தமிழ்ச்செல்வி, 22வது வார்டுக்கு மலர்ஜோதி, கலைச்செல்வி, 23வது வார்டுக்கு ரவி, 24வது வார்டுக்கு வெண்ணிலா, 26வது வார்டுக்கு ரேவதி, 27வது வார்டுக்கு சடையப்பன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ