உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கரும்பு வெட்டும் இயந்திரம் வழங்கஅரசுக்கு பரிந்துரை

கரும்பு வெட்டும் இயந்திரம் வழங்கஅரசுக்கு பரிந்துரை

மோகனூர்: ''விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கரும்பு வெட்டும் இயந்திரம் தருவிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் குமரகுருபரன் பேசினார்.செம்மை கரும்பு சாகுபடி முறைகள், அகலப்பார் அமைத்து கரும்பு சாகுபடி செய்தல், கரும்பு அறுவடை இயந்திரம் பயன்பாடு மற்றும் மூங்கில் சாகுபடியும், சர்க்கரை ஆலை உற்பத்தி குறித்த கருத்தரங்கம், மோகனூரில் நடந்தது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கதிரவன் தலைமை வகித்தார். சர்க்கரை ஆலை தனி அதிகாரி மலர்விழி வரவேற்றார். கலெக்டர் குமரகுருபரன் பங்கேற்று பேசியதாவது:விவசாயிகள், கரும்புகளை வெட்டுவதற்கு முன், அடுத்து செய்ய வேண்டியது செம்மை கரும்பு சாகுபடி என்பதை முன்கூட்டியே முடிவு செய்தும், கரும்பு வெட்டும் இயந்திரம் அறுவடை செய்ய, ஐந்து அடி பார் அடித்து விவசாயம் செய்ய வேண்டும். கரும்பு வெட்டும் இயந்திரம் வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம், மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. விவசாய சங்கத்தினர், முன்னோடி விவசாயிகள் அதற்கு முழு ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் பன்னீர் செல்வம் பேசும்போது,''செம்மை கரும்பு சாகுபடி என்பது, கரும்பில் உள்ள விதை பருக்களை மட்டும் வெட்டி எடுத்து, அவற்றை பிளாஸ்டிக் தட்டுகளில் வைத்து, 25 நாட்கள் முதல், 30 நாட்கள் வரை வளர்த்து, தரமான நாற்றுகளை மட்டும் வயலில் நடவு செய்வதாகும்.இன்றைய காலக்கட்டத்தில், சொட்டுநீர் பாசனம் செய்து, தண்ணீர் பற்றாக்குறை, அதிக கூலி போன்றவற்றில் இருந்து விவசாயிகள் மீண்டு அதிக உற்பத்தி செய்து அதிக லாபம் பெற முடியும்,'' என்றார்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் வேளாண் விஞ்ஞானி ஜெயகிருஷ்ணன் பேசுகையில்,''விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற சூழ்நிலையில், நவீன இயந்திரங்களை பயன்படுத்தவில்லை என்றால், விவசாயத்தில் லாபம் பார்க்க முடியாது. எனவே, விவசாயத்தில் நவீன இயந்திரங்களின் பங்கு அவசியம்,'' என்றார்.நிகழ்ச்சியில், முன்னோடி விவசாயிகள், ஆலை அதிகாரிகள், அங்கத்தினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ