| ADDED : செப் 28, 2011 01:07 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் உள்ள, 92 டாஸ்மாக் கடைகளில், பறக்கும்
படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், 92 டாஸ்மாக் மதுபானக் கடைகள்
உள்ளன. அதில், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன் தலைமையில்,
போலீஸார், கலால் மற்றும் வருவாய் துறையினர் அடங்கிய பறக்கும் படையினர்,
நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.ஆய்வின் போது, டாஸ்மாக் சரக்குகளை தவிர
வேறு போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பாட்டிலை பிரித்து
சில்லரையாக சரக்குகளை விற்பனை செய்கின்றனரா? வரவு- செலவு கணக்கு விபரங்கள்
சரியாக உள்ளதா? கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா? என,
சோதனை மேற்கொண்டனர்.மேலும், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மொத்தமாக மதுபான
பாட்டில்களை வாங்கி உள்ளனரா? குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகும் விற்பனை
செய்யப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர். நேற்று காலை முதல் இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு ஆகிய
மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இதுபோன்ற ஆய்வு நடத்தப்படுவதாக,
டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.