உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்வம் தொழில்நுட்ப கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம்

செல்வம் தொழில்நுட்ப கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம்

நாமக்கல்: நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், 'டாஸ்லிங் டட் கிளப்' சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இதில், செல்வம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான செல்வராஜ், அறங்காவலர் ஜெயம் செல்வராஜ், கல்வி நிறுவனங்களின் செயலாளரும், ஐ.எஸ்.டி.டி.பி., சூப்பர் ஹெட்டுமான கவித்ரா நந்தினி, நிர்வாக மேலாளரும் ஐ.எஸ்.டி.டி.பி., ஹெட்டுமான கார்த்திக், கல்லுாரி முதல்வர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கேக் வெட்டி மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள், அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ