உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொழில் நெறி, விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

தொழில் நெறி, விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வை ஏற்ப-டுத்தும் வகையிலும், பல்வேறு படிப்புகள், பணிவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரம் ஜூலை மாதம் இரண்டாம் வாரம் அனுசரிக்கப்படுகிறது.வரும், 9 முதல், 15 வரை மாற்றுத்திறனாளிகள், மகளிர், பொறி-யியல் மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தொழிற்-பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி வழி-காட்டுதல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்-ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், நாமக்கல் மாவட்ட வேலை-வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை, 04286 222260 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், www.tnskill.tn.gov.inஎன்ற இணையத-ளத்தில் திறன் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்-ளலாம். இணையதளத்திலேயே திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ