உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

ராசிபுரம்: ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து, சேலம் மாவட்டம் ஆத்துார் செல்லும் வழியில் மங்களபுரம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளை போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்து துறையினர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, தண்ணீர்பந்தல்காடு, மெட்டாலா, ஆயில்பட்டி உள்ளிட்ட இடங்களில் இந்த ஆய்வு நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விபத்து நடக்கும் இடங்களில் பார்வையிட்ட அதிகாரிகள், சாலை வளைவு, பார்வைத்திறன் குறைவான இடங்களில் விபத்து நடப்பதை உறுதி செய்தனர். இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் விபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை