உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இரு மொபட்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி

இரு மொபட்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி

நாமக்கல்: நாமக்கல், பெரியப்பட்டியை சேர்ந்த தச்சு தொழிலாளி ஆறுமுகம், 67. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மொபட்டில் பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார். நாமக்கல் பெரியப்பட்டி சாலையில் வந்தபோது, அவ்வழியாக வந்த மற்றொரு மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை