உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை அமைக்க தண்ணீர் தொட்டி அகற்றம் மீண்டும் அமைக்காததால் மக்கள் ஏமாற்றம்

சாலை அமைக்க தண்ணீர் தொட்டி அகற்றம் மீண்டும் அமைக்காததால் மக்கள் ஏமாற்றம்

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, 11-வது வார்டு பகு-தியில், கடந்த, 3 மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது, கடைவீ-தியில் சாலை அமைக்கும்போது, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை அகற்-றினார். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், சாலை அமைக்கும் பணி முடிந்த பின், மீண்டும் அதே இடத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் என, டவுன் பஞ்., அதிகாரிகள் மற்றும் சாலை ஒப்பந்த-தாரர் தெரிவித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். தற்போது, சாலை அமைக்கும் பணி நிறைவ-டைந்து, பல மாதங்களாகியும் அவ்விடத்திலி-ருந்து அகற்றப்பட்ட தண்ணீர் தொட்டியை மீண்டும் அமைக்காததால் மக்கள் ஏமாற்றம-டைந்துள்ளனர். குறிப்பாக, சுல்தான்பேட்டையில் ஞாயிறுதோறும் கூடும் வாரச்சந்தையில், அங்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் தொட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்-தது. தற்போது, குடிநீர் பாட்டில்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அகற்றப்பட்ட தண்ணீர் தொட்டியை மீண்டும் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ