உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு

மல்லசமுத்திரம், சர்வதேச நெகிழி ஒழிப்பு தினத்தையொட்டி, மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் சார்பில், கடந்த, 1ல், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், காளிப்பட்டி கந்தசாமி கோவிலின் பரம்பரை அறங்காவலர் செல்வகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்பேரணியில், கோவிலை சுற்றி நெகிழி விழிப்புணர்வு பதாகைகளை தாங்கியும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில் போலீசார், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உற்சாகமூட்டினர்.பேரணி முடிவில், பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் இனியா, ஹரிதர்ஷினி ஆகியோர் நெகிழியால் பூமிக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ