உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கலெக்டர் அலுவலகம், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

கலெக்டர் அலுவலகம், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.விழாவை முன்னிட்டு, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உறியடித்தல், மியூசிக் சேர், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லேமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, கலெக்டர் உமா பரிசு வழங்கினார்.டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.* அதேபோல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், முதல்வர் கோவிந்தராசு தலைமையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி மாணவியர், பாரம்பரிய உடையான புடவையில் பங்கேற்றனர். வண்ண கோலமிட்டும், புதுப்பானையில் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை