உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பானை விற்பனை ப.வேலூரில் ஜோர்

பானை விற்பனை ப.வேலூரில் ஜோர்

ப.வேலுார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ப.வேலுாரில் மண்பானை விற்பனை ஜோராக நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் மண்பானை விற்பனை செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை வரும், 15ல் கொண்டாடப்படுகிறது. அன்று சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவர். அதற்காக புதுப்பானைகள் வாங்கி செல்கின்றனர். இங்கு ஒரு கிலோ முதல் ஆறு கிலோ வரை, பொங்கல் வைக்க வசதியாக மண் பானைகள் தயார் செய்து, 50 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, ப.வேலுாரை சேர்ந்த பானை வியாபாரி சோமசுந்தரம் கூறியதாவது:மண்பானை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான களிமண் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. தொடர் மழை பெய்துள்ளதால், ஏரி, குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் களிமண் குறைவாக கிடைப்பதால், உற்பத்தியும் இந்தாண்டு குறைந்தது. அதனால், மண்பானைகள் கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட, தற்போது பானை விற்பனை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ