ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர், கணவர் மீது நடவடிக்கை கோரி பா.ம.க., - பா.ஜ.,வினர் மனு
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர், கணவர் மீது நடவடிக்கை கோரி பா.ம.க., - பா.ஜ.,வினர் மனுநாமக்கல், அக். 29-'ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர், இவரது கணவர் ஆகியோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., மாநில மாணவர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பா.ஜ., ப.வேலுார் ஒன்றிய தலைவர் அருண் ஆகியோர், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.பா.ம.க., மாநில மாணவர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், அக்கட்சியினர், நேற்று ப.வேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தனர்.அதில், 'கடந்த, 24ல் ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலகம் சென்ற, பா.ம.க.,வை சேர்ந்த வார்டு கவுன்சிலர் சுகந்தியை, தலைவர் லட்சுமி, அவரது கணவர் முரளி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், கவுன்சிலர் சுகந்தி புகாரளித்துள்ளார். அதன்படி, நான்கு நாள் கழித்து, இன்று (நேற்று) சி.எஸ்.ஆர்., பெற்றோம். அதேபோல் வழக்கு விசாரணை, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதும் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், டவுன் பஞ்., செயல் அலுவலர் மற்றும் தலைவர் ஆகியோர் பதவி விலகக்கோரி, பா.ம.க., சார்பில் மிகப்பெரும் போராட்டம் அறிவிக்கப்படும்' என, கூறியுள்ளார்.அதேபோல், பா.ஜ., ப.வேலுார் ஒன்றிய தலைவர் அருண், டி.எஸ்.பி., முருகேசனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:ப.வேலுார் சிறப்பு நிலை டவுன் பஞ்., வார்டு கவுன்சிலர் சுகந்தி, இவரது கணவர், பா.ம.க., நகர செயலாளர் ஜெய்கணேஷ், காலைக்கதிர் நிருபர் பூபதி ஆகியோர் மீது, டவுன் பஞ்., தலைவர் லட்சுமி பொய் புகார் அளித்துள்ளார். அவற்றை விசாரிக்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்துள்ளார். டவுன் பஞ்., தலைவர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பத்திரிகையாளரையும், எங்கள் தோழமை கட்சி நிர்வாகிகளையும் மிரட்டுகிறார். கவுன்சிலர்கள், 5 பேர் இன்ஸ்பெக்டரிடம் அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாங்கள் இந்த வழக்கை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.