உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.68 லட்சத்தில் திட்டப்பணி பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

ரூ.68 லட்சத்தில் திட்டப்பணி பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு திட்டம் மற்றும் எம்.பி., மேம்பாட்டு திட்டத்தில், 7 வார்டில் கழிவுநீர் கால்வாய், 10 வார்டில் சிமென்ட் சாலை, சிறுபாலம், மற்றும் ஆவாரங்காடு பகுதியில் மழைநீர் வடிகால், கிராம ஆஸ்பிட்டல் வீதி பகுதியில் கான்கிரீட் சாலை, பாவாடி தெருவில் மழைநீர் வடிகால், சிறுபாலம், கான்கிரீட் சாலை உள்ளிட்ட, 68 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை, நேற்று, முன்னாள் அமைச்சர் தங்கமணி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், நாட்டகவுண்டம்புதுார் பகுதியில், 10.45 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலாளர் சுப்ரமணி, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் சிவக்குமார், மாவட்ட கலைபிரிவு செயலாளர் சிங்காரவேலு மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை