உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எருமப்பட்டி பகுதியில் வயலில் தேங்கிய மழைநீர்

எருமப்பட்டி பகுதியில் வயலில் தேங்கிய மழைநீர்

எருமப்பட்டி, : எருமப்பட்டியில் பெய்த மழையால், நெல் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கின.தமிழகம் முழுவதும், கடந்த, 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொல்லிமலை அடிவார பகுதியான எருமப்பட்டி யூனியனில் உள்ள பவித்திரம், முட்டாஞ்செட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில், கடந்த ஐப்பசி மாத பட்டமாக பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழைநீர் தேங்கியிருந்தால் பயிர்கள் அழுகி விடும் என்பதால், வரப்புகளை வெட்டி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும், பல இடங்களில் தாழ்வான வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல், பொன்னேரி அருகே பெய்த மழையால், அப்பகுதியில் பயிரிடப்பட்டு வளர்ந்திருந்த சோளப்பயிர்கள் மழையால் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ