உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலூர் டவுன் பஞ்.,ல் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்

ப.வேலூர் டவுன் பஞ்.,ல் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அதிகாரிகள் அகற்றினர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலை, சுல்தான்பேட்டை, நான்கு ரோடு, முக்கோண பூங்கா ஆகிய பகுதிகளில், அனுமதியின்றி, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த வர்த்தக விளம்பர பலகைகள், கட்சி பேனர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என, டவுன் பஞ்., நிர்வாகத்திடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவுப்படி, துப்புரவு ஆய்வாளர் குருசாமி, மேஸ்திரி ஜனார்த்தனன் மற்றும் துாய்மை பணியாளர்கள், ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பேனர்களை அகற்றினர். மேலும், 'அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்களை வைத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிளக்ஸ் பிரின்டிங் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ