உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருவேலீஸ்வரர் உடனுறை சுந்தரவல்லி கோவில் புனரமைப்பு பணி: பாலாலய பூஜையுடன் துவக்கம்

திருவேலீஸ்வரர் உடனுறை சுந்தரவல்லி கோவில் புனரமைப்பு பணி: பாலாலய பூஜையுடன் துவக்கம்

ப.வேலுார்: ப.வேலுார், கந்தம்பாளையம் அருகே, குன்னமலை கிராமத்தில் மலைக்குன்றின் மீது, பழமை வாய்ந்த வல்லீஸ்வரர் (எ) திருவே-லீஸ்வரர் உடனுறை சுந்தரவல்லி கோவில் அமைந்துள்ளது. இக்-கோவில் முழுவதும் பெரிய, பெரிய கற்களை கொண்டு கலைநய-மிக்க சிற்ப கலையுடன், எழில்மிகு தோற்றத்துடன் வடக்கு, தெற்-காக அமைக்கப்பட்டுள்ளது.சிவன், அம்பாள், முருகன் சன்னதிகள் தனித்தனியாக, மூன்று பகுதிகளாக காணப்படுகின்றன. இந்த சன்னதியில், கற்களால் ஆன சுற்றுச்சுவர்களில் கலை வேலைப்பாடுகள் மிக்க மணி ஆரங்கள், மீன் போன்ற எண்ணற்ற சிற்பங்கள் அடங்கிய துாண்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் மூலம், குன்னமலை முற்கா-லத்தில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்மணி கற்கள் வாணிபத்தில் சிறந்து விளங்கியது புலப்படுகிறது. மேலும், இக்கோவிலில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.இந்த கல்வெட்டுகளில், 'கொல்லிமலை நாட்டு வல்லீஸ்வரர்' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பாறைகள் சிதிலமடைந்துள்-ளதால் மற்ற தகவல்கள் தெளிவில்லாமல் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் காணப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்-னர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது தெளி-வாகி உள்ளது.'கொங்குநாட்டின் சிற்பங்களை வருங்கால சந்ததியினருக்கு எடுத்-துக்கூறும் வகையில், இக்கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆன்மிக அன்பர்கள், அப்பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவிலை புதுப்பிக்க, 3.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த அக்., 13ல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கிடையில், மூலவர் வல்லீஸ்வரர், நந்தி பகவான் ஆகிய சிலைகள் அகற்றி, முறைப்படி கோவில் திருப்பணி துவங்குவதற்-கான பாலாலய பூஜை நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலை-யத்துறை துணை ஆணையர் நந்தகுமார் தலைமை வகித்தார். தொழில் நுட்ப உதவியாளர் விக்கேஷ், சரக ஆய்வாளர் ஜனனி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், முன்னாள் பஞ்., தலைவர் பூங்கொடி குணசேகரன், பக்தர்கள் உள்பட ஏராள-மானோர் பங்கேற்றனர்.கோவில் திருப்பணியில், சிதிலமடைந்த அர்த்த மண்டபம், மகா மண்டபம் பிரித்து மீட்டமைக்கும் பணி, அம்மன் சன்னதி, விநா-யகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் சன்னதிகள் கட்டும் பணி, தடுப்பு சுவர் மற்றும் படிகட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ