உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மேம்பால கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

மேம்பால கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

வெண்ணந்தூர், அக்கரைப்பட்டி மேம்பால கால்வாயில் உள்ள, ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெண்ணந்துார் ஒன்றியம், அக்கரைப்பட்டி பஞ்., மேம்பாலம் பகுதியில் திருமணிமுத்தாறு கால்வாய் செல்கிறது. இதன் அருகே, விவசாய நிலங்கள் உள்ளன. கால்வாயின் பெரும் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளும், கோரைப்புற்களும் ஆக்கிரமித்துள்ளன. மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் குப்பையும், ஆகாயத்தாமரைகளுடன் சேர்ந்து கால்வாயை நிரப்பி விடுகிறது. கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆகாயத் தாமரை செடிகள் முழுவதுமாக மூடியிருப்பதால், அக்கம் பக்கத்தில் இருந்து அடித்து வரப்படும் குப்பை மற்றும் கழிவுகள் ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றன.இரவு நேரங்களில் படையெடுக்கும் வண்டுகளால், அருகே உள்ள தோட்டத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை, மழை துவங்குவதற்கு முன் அகற்றி, தண்ணீர் வழிந்தோட வழிவகை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை