உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் மீண்டும் ரயிலை நிறுத்த கோரிக்கை

வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் மீண்டும் ரயிலை நிறுத்த கோரிக்கை

கரூர், கரூர்-சேலம் இடையே புதிய ரயில்வே வழித்தடம், கடந்த, 2013 முதல் செயல்பட்டு வருகிறது. அதன் வழியாக நாள்தோறும், 10க்கும் மேற்பட்ட பயணிகள், சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த, 2018ல் மத்திய ரயில்வே வாரிய வணிகத்துறை அதிகாரிகள், அதிக ரயில்கள் இயக்கமில்லாத வழித்தடங்களில், தனியாரால் இயக்கப்படும் ரயில் ஸ்டேஷன்களில் இருந்து, நாள்தோறும் குறைந்தபட்சம், 25 பயணிகள் ஏறி செல்லாத, ரயில்வே ஸ்டேஷன்களை மூட உத்தரவிட்டது. அதன்படி, சேலம்-கரூர் வழித்தடத் தில் உள்ள வாங்கல் ரயில்வே ஸ்டேஷன், கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதனால், சேலத்தில் இருந்து கரூர் செல்லும், பயணிகள் வாங் கல் ரயில்வே ஸ்டே ஷனில் இறங்க முடிய வில்லை. நாமக்கல் மாவட் டம், மோகனுார் அல்லது கரூரில் இறங்கி, பஸ்சில் வாங்கல் செல்லும் நிலை உள்ளது.மேலும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் முன் பதிவு செய்யும், வாங்கல் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், பஸ், கார், டூவீலரில் கரூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சேலத்தில் இருந்து காலையில் இயக்கப்படும், பயணிகள் ரயிலை, வாங்கலில் நிறுத்தினால், கரூரில் வந்தே பாரத் ரயிலில் மிக எளிதாக செல்ல முடியும். எனவே, சேலம்-கரூர் ரயில்வே வழித்தடத்தில், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் மீண்டும், பயணிகள் ரயிலை நிறுத்த வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை