| ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
ராசிபுரம் : ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, 'ராசிபுரம் பேருந்து மீட்பு' கூட்டமைப்பினர், இன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் ஒன்றிணைந்து, 'ராசிபுரம் பேருந்து நிலைய மீட்டு கூட்டமைப்பு' என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இவர்கள் முதல் கட்டமாக, கடந்த, 18ல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டடனர். 23ல் உண்ணா விரதம் இருப்பதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதையடுத்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் அனுமதியளிக்க உத்தரவிட்டதை அடுத்து, இன்று காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, புதிய பஸ் ஸ்டாடண்ட், எம்.ஜி.ஆர். சிலை அருகே உண்ணாவிரதம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ராசிபுரம் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.