உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 108 ஆம்புலன்ஸ் நெம்பர் மாற்றியதாக வதந்தி; நம்ப வேண்டாம் என நிர்வாகம் மறுப்பு

108 ஆம்புலன்ஸ் நெம்பர் மாற்றியதாக வதந்தி; நம்ப வேண்டாம் என நிர்வாகம் மறுப்பு

நாமக்கல்: '108 அவசரகால ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றம்' என, சமூக வலைதளத்தில் வதந்தி பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம்' என, நாமக்கல் மாவட்ட, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை திட்டம், 2008ல் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்று வரை, மருத்துவ அவசர உதவிக்கு மட்டுமின்றி போலீஸ் மற்றும் தீயணைப்பு போன்ற பிற அவசரகால சேவைகளையும் வழங்கி வருகிறது. மேலும், தேவைப்படும் இடங்களில் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ்களையும் வழங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை அவசரகால மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு, இன்னுயிர் காக்கும் சேவையில், 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன.இதன் முக்கிய நோக்கம், பிரசவம், நெஞ்சுவலி, சாலை விபத்து மற்றும் பல மருத்துவ அவசர நிலைகளுக்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிப்பதே. இதன் மூலம், பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. சில நாட்களாக, நாமக்கல் மாவட்டத்தில், '108 ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றம்' என, பல எண்களை வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2008 முதல், இன்று வரை, 108 ஆம்புலன்சில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. இது தவறான தகவல். அதனால், பொதுமக்கள் இதை நம்பவேண்டாம். தங்களின் அவசர மருத்துவ உதவிக்கு வழக்கம்போல், 108 அவசரகால எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை