உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு

நாமக்கல்: மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், 'கனவு இல்லம்' திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 321 கிராம பஞ்.,களில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம், திருச்செங்கோடு, எலச்சிப்பா-ளையம், பள்ளிப்பாளையம் ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. நேற்று, நாமக்கல், புதுச்சத்-திரம், ராசிபுரம், மோகனுார், கபிலர்மலை, வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய, எட்டு ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்.,களில் கிராம சபை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், பழுதடைந்த ஊரக வீடுகளை சீர-மைத்தல் திட்டம் மற்றும் 'கனவு இல்லம்' திட்டம் செயல்படுத்த, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். பஞ்., துணைத்தலைவர் ராமதாஸ், எஸ்.ஐ., குணசேகரன், வி.ஏ.ஓ., தமிழ-ரசி, பற்றாளர் தேன்மொழி உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி