உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு தேர்வு

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு தேர்வு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 'இல்லம் தேடி கல்வி' திட்ட தன்னார்வலர்களுக்கு கணினி வழி தேர்வு, நேற்று நடந்தது. உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் மாணவர்கள் வருகை பதிவேற்றம் (இ.எம்.ஐ.எஸ்.,) ஆகிய பணிகளுக்காக, 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்களுக்கு கணினி வழி தேர்வு, இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில், ஏழு மையங்களில் நடந்தது.இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் தேர்வில் பங்கேற்றனர். இத்தேர்வின் மைய பார்வையாளர்களாக மாவட்ட கலெக்டர் ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன், வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், சண்முகம் ஆகியோர் செயல்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை