உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செடல் மாரியம்மன் கோவில் திருவிழா

செடல் மாரியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல், நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் ஆடி 18 பண்டிகை முடிந்ததும், ஊர்மக்கள் ஒன்று கூடி கோவிலில் பல்லி சகுனம் கேட்பர். அவ்வாறு கடந்த ஆடி மாதம் கடைவெள்ளிகிழமையன்று சகுனம் கேட்டனர். அன்று இரவு பல்லி சகுனம் சொல்லியவுடன் திருவிழா கோலாகலமாக துவங்கியது. 19 ம் தேதி காப்புக்கட்டி, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு அபிேஷம் செய்ய தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று சப்பாரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் செடல் மாரியம்மன், முதலைப்பட்டி, புதுார் உள்ளிட்ட பகுதிகளில் திருவீதி உலா நடந்தது. இரவு செடல் எனும் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. இன்று கிடா வெட்டுதலும், 29ம் தேதி மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை