உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சித்த மருத்துவ முகாம்

சித்த மருத்துவ முகாம்

ப.வேலுார்: ப.வேலுார், பரமத்தி, நல்லுார், கபிலர்மலை அரசு சித்த மருத்துவ பிரிவு டாக்டர்கள் மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை இணைந்து, சிறப்பு சித்த மருத்துவ முகாமை நடத்தின. ப.வேலுார் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், நேற்று காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடந்தது. முன்பதிவு செய்த, 75 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு வல்லாரை மாத்திரை, பரங்கிப்பட்டை, பல்பொடி, மூலிகை சோப், உடல் வலியை போக்கும் தைலம், பில்வாதி லேகியம், மசாஜ் ஆயில் அடங்கிய பெட்டகம், இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, அரசு சித்த மருத்துவர் பிரிவு டாக்டர்கள் பர்விஸ்பாபு, சித்ரா, சிவகாமி, கோகிலா மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை