மேலும் செய்திகள்
உதயநிதி பிறந்தநாள் விழா
09-Dec-2024
தி.மு.க., நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சிராசிபுரம், ஜன. 4-ராசிபுரத்தில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சியளிக்கப்பட்டது. தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி செயலாளருமான உதயநிதி அறிவுறுத்தல்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி, தி.மு.க., இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம், நேற்று ராசிபுரத்தில் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாத், நிர்வாகிகள் ரமேஷ் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்துகொண்டனர். எழுத்தாளர் மதிமாறன், இளமாறன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
09-Dec-2024