உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா

மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா

குமாரபாளையம்: தமிழக அரசு சார்பில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோவில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா, பாண்டுரங்கர் கோவில் வளாகத்தில் உள்ள சுந்தரம் மண்டபத்தில் நடந்தது. அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமை வகித்தார். மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் சவுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, பள்ளிப்பாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் பங்கேற்று, மூத்த தம்பதியர்களுக்கு திருமண பரிசு வழங்கி வாழ்த்தினர். நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் சுவாமிநாதன், திருச்செங்கோடு உதவி ஆணையர் ரமணிகாந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ