உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 9, 10ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு, கவிதை போட்டி

9, 10ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு, கவிதை போட்டி

நாமக்கல்: 'தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், வரும், 9, 10ல், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-24ம் ஆண்டுக்கான, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கு, வரும், 9ல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, வரும், 10ல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியிலும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்கிறது.இப்போட்டியில், நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும், கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியரும் கலந்து கொள்ளலாம்.போட்டிக்கான தலைப்புகள், போட்டி நடக்கும் நாள் அன்று, போட்டி துவங்குவதற்கு முன் அறிவிக்கப்படும். போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, தனித்தனியே, முதல் பரிசு, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்படும்.மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநில போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286- 292164 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை