உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தண்டனையில் இருந்து விலக்கு அறிவிப்பு பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர் நன்றி

தண்டனையில் இருந்து விலக்கு அறிவிப்பு பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர் நன்றி

நாமக்கல்: இலங்கை தமிழர் முகாமில் வசிப்போர், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினர்.நாமக்கல் மாவட்டத்தில், பரமத்தி, எருமப்பட்டி, எம்.மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள, இலங்கை தமிழர் முகாமில், 700 குடும்பங்களை சேர்ந்த, 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இலங்கையில் இருந்து, 2015 ஜன., 9க்கு முன், உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் பதிவு செய்து சட்டப்பூர்வமாக தங்கியுள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும், 103 முகாம்களில், 58,000 பேர் வசிக்கின்றனர்.இந்நிலையில், மத்திய அரசு, கடந்த செப்., 2ல், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையிலிருந்து விலக்கு அளித்து, அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழர் முகாமில் வசிப்போர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, நாமக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து, 370 கடிதங்களை அனுப்பினர்.இதுகுறித்து, பரமத்தி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த வினோதன் கூறியதாவது:கடந்த, 1954- முதல், 2015 ஜன., 9-க்கு முன், இலங்கையில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக தமிழகம் வந்தனர். அவர்கள், 103 முகாம்களில் தாங்கி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 2,500 பேர் வசிக்கின்றனர். மத்திய அரசு, கடந்த செப்.,ல் வெளியிட்ட அரசாணையில், 'இலங்கையில் இருந்து, 2015க்கு முன் திரும்பி வந்து முறையாக இந்திய அரசிடம் பதிவு செய்து வசித்து வருபவர்களுக்கு, குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறோம்' என்பதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை