| ADDED : பிப் 25, 2024 03:42 AM
நாமக்கல்: -நாமக்கல்,- பரமத்தி சாலையில், 'சஸ்சக்ஸ் பாரக்ஸ்' என்ற நிறுவனம் அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற இந்நிறுவனம், வெளிநாட்டு பணம் பரிமாற்றம், வெளிநாடு செல்லத் தேவையான கரன்சி மற்றும் பாரக்ஸ் கார்டு பெற்று தரும் பணியை மேற்கொண்டுள்ளது.சஸ்சக்ஸ் பாரக்ஸ் நிறுவனம், நாமக்கல் மாவட்டத்திலேயே முதன் முறையாக இந்த மையத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. மைய இயக்குனர்கள் ராஜதுரை துரைசாமி, வளர்மதி ராஜதுரை, சர்வஜித் ராஜதுரை ஆகியோர் வரவேற்றனர்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று, மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தாமஸ் குக் நிறுவனத்தின், தென்னிந்திய ரீஜினல் ஹெட் சுஷாந்த் சீனிவாசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.