நாமக்கல்;'வரும், 24ல் திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 24 காலை, 10:00 மணிக்கு, 'திலேப்பியா' மீன் வளர்ப்பு என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், மீன்பண்ணை குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணை குட்டை அமைத்தல், மீன்குஞ்சு தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண் முறைகள். மாநில, மத்திய அரசின் மீன் வளர்ப்புக்குறிய மான்யம் குறித்து விளக்கப்படுகிறது.மேலும், தேசிய மீன்வளர்ப்பு தினத்தை முன்னிட்டு, விவசாயிகளிடம் மீன்களை பற்றி வினா விடை கேட்கப்படும். அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650, 73585 94841 ஆகியே தொலைபேசி, மொபைல் எண்களிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.