உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல்

உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல்

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாயிகள் கொண்டுவந்து விற்கப்படும் காய்கறிகளை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், உழவர்சந்தை, பூங்கா சாலை மற்றும் பொய்யெரிக்கரை சாலையில் சாலையோர வியாபாரிகள் கடை விரித்து வியாபாரம் செய்கின்றனர்.அதனால், உழவர் சந்தைக்குள் கடை வைத்துள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், நான்கு சாலைகள் சந்திக்கும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு மற்று இடம் ஒதுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி