உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிநீரை பயன்படுத்த முடியவில்லை கலெக்டரிடம் பஞ்., தலைவர் புகார்

குடிநீரை பயன்படுத்த முடியவில்லை கலெக்டரிடம் பஞ்., தலைவர் புகார்

பள்ளிப்பாளையம்: களியனுார் பஞ்., பகுதி மக்களுக்கு வழங்கும் குடிநீரில் சாய கழிவுநீர், தோல் கழிவுநீர் அதிகளவு கலந்து வருவதால், குடிநீரை பயன்படுத்த முடியவில்லை என, மாவட்ட கலெக்டரிடம் பஞ்., தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட களியனுார் பஞ்., பகுதி மக்களுக்கு, ஆவத்திபாளையம் ஆற்றுப்பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீரில் சாய கழிவு நீர் அதிகளவு கலப்பதால் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் உமா பள்ளிப்பாளையம் பகுதிக்கு வந்தார். அப்போது களியனுார் பஞ்., தலைவர் ரவி குழந்தைவேல் கலெக்டரை சந்தித்து குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து தலைவர் ரவிகுழந்தைவேல் கூறியதாவது:ஆவத்திபாளையம் ஆற்றுப்பகுதியில் இருந்து, குடிநீருக்கு தண்ணீர் எடுக்கும் இடத்தில் சாய கழிவுநீர், தோல் கழிவுநீர் அதிகளவு கலப்பதால், குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. சீராம்பாளையம் ஆற்றுப்பகுதியில் இருந்து, துாய்மையான தண்ணீர் எடுத்து குடிநீர் பல பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, சீராம்பாளையம் பகுதியில் இருந்து களியனுார் பஞ்., மக்களுக்கும் துாய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ