| ADDED : நவ 24, 2025 01:34 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. நாமக்கல்லில் இருந்து கொல்லிமலைக்கு செல்ல வேட்டாம்பாடி, முத்துக்காபட்டி, சேந்தமங்கலம், ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, காரவள்ளி வழியாக செல்லலாம். அந்த வழியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்போது, சேந்தமங்கலத்தில் இருந்து காளப்பநாயக்கன்பட்டிக்கு சென்று அங்கிருந்து நடுக்கோம்பை வழியாக கொல்லிமலை அடிவார-மான, காரவள்ளி பகுதியை அடையாளம். இதற்காக கூடுதல் நேரம் செலவாகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, சேந்தமங்-கலம் அடுத்துள்ள அண்ணா நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து செட்-டிகுளம் வழியாக வெண்டாங்கிக்கு செல்லும் பாதை ஒன்று உள்-ளது. ஆனால், அந்த பாதை மிகவும் கரடுமுரடாக இருந்து வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அந்த பாதையை சீரமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தற்போது அந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்-ளனர்.