உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் வழிபாடு

கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் வழிபாடு

சேந்தமங்கலம்: கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, நேற்று காலை சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், காந்திபுரம் கருமாரியம்மன் மற்றும் பழைய-பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.காந்திபுரம் கருமாரியம்மன் கோவிலில் உள்ள மூலவருக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவி-யங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. தற்போது, கார்த்திகை தீப திருவிழா நடந்து கொண்டிருப்பதால் கோவில் வளாகத்தில் அகல்விளக்கு ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ