உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் வசதி படைத்தோர் பெயர்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் வசதி படைத்தோர் பெயர்

ஊட்டி : 'வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் காணப்படும் வசதி படைத்தவர்களின் பெயரை நீக்கம் செய்ய வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி ஐலேண்ட் அறக்கட்டளையில், ஊட்டி ஒன்றிய அளவிலான பெண் பிரதிநிதிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீலகிரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உண்மையான ஏழைகளின் பெயர்களை இடம் பெற செய்வதுடன், அதில் உள்ள வசதி படைத்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் லாவண்யா தலைமை வகித்தார். அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் அல்போன்ஸ் ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, கோத்தகிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் ஊட்டி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் இருந்தும் தலா 2 பேர் பங்கேற்றனர். செயலாளர் விஜயா வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் வசந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்