மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
2 hour(s) ago
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே மூடுதுறை கிராமத்தில் வேளாண்மைத்துறையின் வாயிலாக விவசாயிகளின் தோட்டங்களில், விதை உற்பத்திக்காக பயிரிடப்பட்டுள்ள சோளம் மற்றும் நிலக்கடலை விதைப்பண்ணைகளை, கோவை விதைச்சான்று உதவி இயக்குநர் மாரிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது:-நிலக்கடலை பி.எஸ்.ஆர்., 2 என்ற ரகமானது 110 நாட்கள் வயதுடையது. 45 முதல் 50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. காய்கள் ஓரளவு சிறியதாகவும், மூக்கு கூர்மையில்லாதது போலவும் காணப்படும். 45ம் நாளில் ஜிப்சம் இட்டு மண் அணைப்பதன் வாயிலாக விழுதுகள் மண்ணில் நன்கு இறங்கி ஏக்கருக்கு 1000 முதல் 1500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago