உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 101 வயது மூதாட்டிக்கு வீடு ஆர்.டி.ஓ., ஆய்வில் தகவல்

101 வயது மூதாட்டிக்கு வீடு ஆர்.டி.ஓ., ஆய்வில் தகவல்

பந்தலுார்;'பந்தலுார் அருகே சேரம்பாடி திருவள்ளுவர் நகர் கிராமத்தில் வாழும், 101 வயது மூதாட்டிக்கு விரைவில் வீடு கட்டித்தரப்படும்,' என, உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே, சேரம்பாடி திருவள்ளுவர் நகர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 101. இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆன நிலையில், தற்போது ஒரு மகளுடன் வசித்து வருகிறார். இவர்கள் குடியிருக்க மிகவும் பாழடைந்த ஒரு வீடு மட்டுமே உள்ளது. அதில், மின் வசதி மற்றும் கழிப்பிடவசதிகள் இல்லாததால், 101 வயது மூதாட்டி மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். இயற்கை உபாதைகளை கழிக்க அருகில் உள்ள வீட்டிற்கு தினசரி செல்ல வேண்டிய நிலையில், தற்போது மழை பெய்து வீட்டிற்குள் ஊற்று ஏற்பட்டு வீட்டின் முன்பாக, நடந்து செல்லவே முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நிவாரண முகாமிற்கு செல்ல முடியாத நிலையில் தவித்து வரும், மூதாட்டி பழனியம்மாள் நிலை குறித்து, கூடலுார் ஆர்.டி.ஓ. செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இவர்கள் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வீடு கட்டி தரவும் அறிவுறுத்தினார். மேலும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரவும் அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.பழனியம்மாள் கூறுகையில், ''நான் இதுவுரை மின்சார வீட்டில் குடியிருந்தது இல்லை. எனக்கு வீடு மற்றும் கழிப்பிட வசதியுடன் மின் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தால் மிகவும் பயனாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ