உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள்

ஊட்டி;ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமம் இருந்து, 228 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில், 'பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட, 228 மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; நல திட்ட உதவிகள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நலநிதியில் இருந்து, முன்னாள் படை வீரர் முருகன் என்பவருக்கு, கண் கண்ணாடி மானியமாக, 4,000 ரூபாய், செல்வம் என்பவருக்கு, தனது மகள் திருமணத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் திருமணமான நிதி அனுமதி ஆணை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை