உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் 4 செ.மீ., மழை: மரம் விழுந்ததால் பாதிப்பு

ஊட்டியில் 4 செ.மீ., மழை: மரம் விழுந்ததால் பாதிப்பு

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று மதியம், 3:00 மணிக்கு இடி, மின்னலுடன் துவங்கிய மழை, மாலை வரை தொடர்ந்தது. படகு இல்லம் சாலையில், மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் மழையை பொருட்படுத்தாமல், குடை பிடித்து இதமான காலநிலையில் சுற்றுலா பயணியர் மலர்களை ரசித்தனர்.குன்னுாரில் பெய்த மழைக்கு, சிங்காரா பகுதியில் சாலையோர ராட்சத மரம் விழுந்ததில் இரு கார்கள் சேதமாகின. கார் டிரைவர் நந்தகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கு, இருபுறம் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குன்னுார் தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றிய பின், போக்குவரத்து சீரானது. ஊட்டி, குன்னுார் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு பின் நிலவிய, இதமான காலநிலைய சுற்றுலா பயணியர் ரசித்தனர்.நேற்று, மாலை, 5:00 மணி நிலவரப்படி, ஊட்டி, 4 செ.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை