உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 2வது சீசனுக்கு 4 லட்சம் மலர்கள் ஊட்டி பூங்காவில் நடவு பணி விறுவிறு

2வது சீசனுக்கு 4 லட்சம் மலர்கள் ஊட்டி பூங்காவில் நடவு பணி விறுவிறு

ஊட்டி:ஊட்டியில் இரண்டாவது சீசனுக்கு, 4 லட்சம் மலர்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் செப்., மாதம் துவங்குகிறது. இதற்கான மலர் செடிகள் நடவு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வித விதமான விதைகள் வரவழைக்கப்பட்டன.'கோல்கட்டா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 'இன்காமேரி கோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர் வெர்பினா லுாபின்' உட்பட 60 வகை விதைகள் பெறப்பட்டு நாற்று உற்பத்தி செய்யும் பணி சில மாதங்களாக நடந்தது.தற்போது நான்கு லட்சம் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. நடவுப் பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தாவரவியல் பூங்காவில் கடந்த வாரம் துவக்கி வைத்தார்.தற்போது, பூங்கா ஊழியர்கள், பூங்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாத்திகள் மற்றும் 10,000 மலர் தொட்டிகளிலும் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி