உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் 5000 வாழை மரங்கள் பாதிப்பு; நிவாரணத்துக்கு காத்திருக்கும் விவசாயிகள்

மழையால் 5000 வாழை மரங்கள் பாதிப்பு; நிவாரணத்துக்கு காத்திருக்கும் விவசாயிகள்

கூடலுார் : கூடலுார் பகுதியில் மழையின் போது காற்றில் பாதிக்கப்பட்ட நேந்திரன் வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உள்ளனர்.

பலத்த காற்று

கூடலுார், பந்தலுார், நடுவட்டம், தேவாலா, முதுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வரும் மழையுடன், அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது.கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையில், மண்வயல், பாடந்துறை, புளியம்பாறை, மங்குழி, ஏழுமுரம், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் மழையில் மூழ்கியும் காற்றின் காரணமாகவும், 5000க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.நேந்திரன் வாழை பயிரிட செலவிட்ட தொகை கூட கிடைக்காத நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நேந்திரன் வாழைக்கு தற்போது தான் ஓரளவு விலை கிடைத்து வருகிறது. ஒரு மாதத்தில் அறுவடை செய்ய இருந்த, மழையுடன் வீசிய காற்றில், ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து, நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நஷ்டத்தை ஈடு செய்ய அரசு, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள், குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் நிவாரண உதவி கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும்,' என, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை