பயன் இல்லாத பாலம் மக்கள் வரி பணம் வீண்
பந்தலுார், : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சியில் சேரம்பாடி 'டான்டீ' பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் தேயிலை தோட்டத்தை கடப்பதற்கு சதுப்பு நிலப்பகுதியில் சாலை மற்றும் நடைபாதை இல்லாத நிலையில் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும், இந்த பகுதியில் கால்வாய் செல்லும் நிலையில் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து கால்வாயை கடக்க முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஊராட்சி மூலம், 2.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் நடைபாதை அமைக்காத நிலையில் பாலம் அமைத்தும், தொழிலாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில், மக்கள் வரி பணம் வீணாகி உள்ளது. எனவே, பாலம் பணியை நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக நடைபாதை அமைத்து தர வேண்டும்.