உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டிற்குள் துதிக்கையை விட்ட காட்டு யானை

வீட்டிற்குள் துதிக்கையை விட்ட காட்டு யானை

பந்தலுார்;பந்தலுார் அருகே பெருங்கரை மற்றும் அதனை ஒட்டிய நெல்லியாளம் டான்டீ பகுதியில், கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களை ஒட்டிய புதர் பகுதியில், யானைகள் முகாமிடுவதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், வெளியிடங்களுக்கு சென்று திரும்பும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெளியில் செல்ல முடியாத சூழலில் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லியாளம் டான்டீ பகுதிக்கு வந்த யானை சுப்ரமணி என்பவரது வீட்டு கதவை உடைத்து துதிக்கையை வீட்டிற்குள் விட்டது. இதனால், வீட்டின் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், வன குழுவினர் வந்து யானையை அங்கிருந்து விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை