உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தென்னங்கள்ளில் கலப்படம் செய்ய மண்ணுக்குள் எரிச்சாராயம் பதுக்கல்

தென்னங்கள்ளில் கலப்படம் செய்ய மண்ணுக்குள் எரிச்சாராயம் பதுக்கல்

பாலக்காடு;பாலக்காடு அருகே, தென்னங்கள்ளில் கலப்படம் செய்ய, மண்ணுக்குள் பதுக்கி வைத்திருந்த, 270 லிட்டர் எரிசாராயத்தை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு கலால் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டனின் தலைமையிலான போலீசார், செமணாம்பதி புளியங்கண்டி சாலை அருகே சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அங்குள்ள ஓடையில் நான்கு அடி ஆழத்தில் குழி தோண்டி, மண்ணுக்குள் 10 கேன்களில், 270 லிட்டர் எரிச்சாராயம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதை யார் பதுக்கி வைத்தனர் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை.இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கூறுகையில், ''தென்னங்கள்ளில் கலக்கும் எரிச்சாராயத்தை கலால் துறையின் சோதனைக்கு பயந்து, குழி தோண்டி மண்ணுக்குள் பதுக்கி வைத்துள்ளனர்.தமிழக எல்லையில் உள்ள தென்னந்தோப்புகளில் கள்ளு உற்பத்தி செய்கின்றனர். இந்த கள்ளில் போதை கூட்டுவதற்காக எரிசாராயம் பயன்படுத்துகின்றனர். இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ