உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை விவசாய முறைகளை கற்று கொள்ள அறிவுரை

இயற்கை விவசாய முறைகளை கற்று கொள்ள அறிவுரை

கூடலுார்;கூடலுார் வண்டிப்பேட்டை ஊராட்சி பள்ளியில், உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உணவு கண்காட்சி நடந்தது. அஜித் தலைமை வகித்தார்.வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசுகையில், ''உணவு உற்பத்தியில் நாம் பயன்படுத்தும் மருந்துகள், ரசாயனங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை தவிர்க்க இயற்கை விவசாயம் குறித்து அறிந்து கொள்வதுடன், இயற்கை விவசாய முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்,''என்றார்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''இன்று மருந்து உணவாக எடுத்துக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. உணவை மதிப்பு கூட்டு பொருளாக உருவாக்குதல் மூலம், அதனை நீண்ட நாட்கள் பதப்படுத்தி பயன்படுத்துகிறோம். அதில் சேர்க்கும் ரசாயனங்கள் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.இயற்கை ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுவரன், சுகாதார ஆய்வர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி