உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க அறிவுரை

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க அறிவுரை

பந்தலுார்: பந்தலுார் தாசில்தார் அலுவலகத்தில், சுற்றுப்புற கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று காலை தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகித்தார். தோட்டக்கலை துறை அதிகாரிகள் பேசுகையில்,'அரசின் திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் நிலம் குறித்த ஆவணங்களை அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையலாம். கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் காய்கறி விவசாயம் குறைவாகவே உள்ள நிலையில், அதனை அதிகரிக்க துறை மூலம் விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டு தோட்டங்கள் அமைத்து காய்கறி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்,' என்றனர். தொடர்ந்து, பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கியதுடன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. 'ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும்,' என, அதிகாரிகளுக்கு வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை