மேலும் செய்திகள்
அவலாஞ்சி சுற்றுலா மையம்; இன்று ஒரு நாள் மட்டும் மூடல்
2 minutes ago
நுகர்வோருக்கு எடையளவு தெரியும்படி வைக்க உத்தரவு
50 minutes ago
பழங்குடியின மருத்துவமனையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு
55 minutes ago
கூடலுார் : முதுமலை மசினகுடி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு பின் எழுந்து சென்ற யானை உயிரிழந்தது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் இடத்தில், 5ம் தேதி, 8 வயது காட்டு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப் பின் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது.நிம்மதி அடைந்த வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்தனர். இந்நிலையில், சிங்கார சாலை ஒட்டிய தனியார் இடத்தில் அந்த யானை உயிரிழந்து கிடந்தது. மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் ஜான்பீட்டர், வனவர் சங்கர் உடலை நேற்று, காலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'உடல் சத்து குறைபாடு, பலவீனம் காரணமாக உயிரிழந்துள்ளது. அதன் உள் உறுப்புகளில் ஒட்டுண்ணி புழுகள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,' என்றனர். * கூடலுார் ஸ்ரீமதுரை அருகே, தர்ப்ப கொல்லி பகுதியில், வாய்க்கால் சேற்றில் சிக்கிய ஆண் காட்டெருமை நேற்று முன்தினம் உயிரிழந்தது. உதவி வன பாதுகாவலர் கருப்பையா வனச்சரகர் ராதாகிருஷ்ணன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில்,'10 நாட்களுக்கு முன்பு மற்றொரு காட்டெருமையுடன், ஏற்பட்ட சண்டையில், இதன் கொம்பு உடைந்து, 'செப்டிக்' ஆகி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வாய்க்கால் சேற்றில் சிக்கிய காட்டெருமை, வெளியே வர முடியாமல், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது,' என்றனர்.
2 minutes ago
50 minutes ago
55 minutes ago