மேலும் செய்திகள்
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
1 minute ago
நீலகிரி மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை
1 minutes ago
ஊட்டி;ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் விழாவில் அம்மன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு, பகல், 1:55 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருவீதி உலா, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
1 minute ago
1 minutes ago