மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
சூலுார்;சூலுார் சட்டசபை தொகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓட்டளிக்க, தபால் ஓட்டு விண்ணப்பங்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டு வருகிறது.சூலுார் சட்டசபை தொகுதியில், 1 லட்சத்து, 56 ஆயிரத்து, 175 ஆண்கள், 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 545 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 83 பேர் என, மொத்தம், 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 803 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில், ஆயிரத்து, 608 பேர் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், 2 ஆயிரத்து 612 பேர் உள்ளனர். அவர்கள், தபால் மூலம் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.தபால் ஓட்டளிக்க அவர்களின் ஒப்புதலை பெற, வீடு தேடி சென்று அதற்குரிய விண்ணப்பங்களை தேர்தல் பிரிவு ஊழியர்கள் அளித்து வருகின்றனர். அவர்களிடம் தபால் மூலம் ஓட்டளிக்க விருப்பமா, என, கேட்கின்றனர். அதற்கு அவர்கள், தபால் ஓட்டளிக்க விரும்பினால், அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அவர்களிடம் கையெழுத்து பெற்று வரும் பணி தீவிரமாக நடக்கிறது.இதுகுறித்து சூலுார் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'மாற்றுத்திறனாளிகள் மற்றும், 85 வயதுக்கு மேல் உடைய வாக்காளர்கள் தபால் ஓட்டளிக்க இதுவரை, 400க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்துள்ளனர். மேலும் பலர் ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடக்கிறது' என்றனர்.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025